பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடின், பாஸுக்கும் அம்னோவுக்குமிடையில் உறவுகள் மேம்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை வரவேற்றார், அதே வேளை “தீமைக”ளுக்கு எதிரான போராட்டமும் தொடர வேண்டும் என்றார்.
“ஒத்துழைப்பு (பாஸுக்கும் அம்னோவுக்குமிடையில்) ஏற்பட்டிருப்பது உண்மையானால் நல்லதுதான்.
“அதே வேளை அரசியல் விவகாரங்களிலும் நிர்வாகத்திலும் தவறுகள் காணப்பட்டால் நாம் மெளனமாக இருந்து விடக் கூடாது”, என அஸ்ரி முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
ஆளும் கட்சிக்கும் இஸ்லாமியக் கட்சிக்குமிடையில் உறவுகள் மேம்பட்டு வருவதாகக் கூறும் பெர்னாமா செய்தி குறித்துக் கருத்துரைத்தபோது அஸ்ரி இவ்வாறு கூறினார்.