ஜிஎல்சிகள் அவற்றின் சொத்துக்களை விற்கக் கூடாது

glcஅரசுதொடர்பு   நிறுவனங்கள்(ஜிஎல்சி)   நல்ல   ஆதாயம்    தரக்கூடிய    சொத்துக்களை   விற்றுவிடக்கூடாது  என்று     ஜோகூர்    சட்டமன்ற    உறுப்பினர்   தெங்கு    புத்ரா   ஹருன்   அமினுரஷிட்      கூறினார்.

“ஜிஎல்சிகள்   சொத்துக்களைத்    தாங்களே     மேம்படுத்த    முடியும்    என்கிறபோது     நல்ல    சொத்துக்களைத்    தனியார்மயமாக்குவதோ     மற்றவர்களுக்கு   விற்பதோ    கூடாது”,  என   கெம்பாஸ்    சட்டமன்ற   உறுப்பினர்     ஜோகூர்   சட்டமன்றத்தில்     கூறினார்.

நல்ல     சொத்துக்களை   மற்றவர்கள்    ஆதாயம்   பெறுவதற்காக    விற்று   விட்டால்   பிறகு   விலைமதிப்பற்ற   சொத்துக்கள்  மட்டுமே   அவற்றிடம்   இருக்கும்.

ஜோகூர்  ஆட்சியாளர்   சுல்தான்   இப்ராகிம்    சுல்தான்   இஸ்கண்டர்   சட்டமன்றக்   கூட்டத்தைத்    தொடக்கி   வைத்து     ஆற்றிய   உரையை    அவர்   சுட்டிக்காட்டினார்.

ஜோகூர்   சுல்தான்,  ஜிஎல்சிகள்   அரசு   நிர்ணயித்துள்ள   வழிகாட்டுமுறைகளைப்  பின்பற்ற    வேண்டும்    என்றார்.

ஜிஎல்சி-க்குப்   பொறுப்பாக    உள்ளவர்கள்     அரசுக்கு    ஆதாயம்    தேடித்   தராமல்   சம்பள  உயர்வுக்குக்    கோரிக்கை   விடுக்கக்   கூடாது    என்றும்   சுல்தான்   கூறினார்.