மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் நாட்டிலுள்ள நிறுவனங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளில் காணப்படும் ஊழல் பழக்கவழக்கங்களை எம்எசிசியிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர்கள் வெறுமனே இல்லை என்று சொல்லக்கூடாது. அவர்கள் எம்எசிசியிடம் வர வேண்டும் என்று புத்ராஜெயாவில் எம்எசிசி தலைமையகத்தில் “ஊழல் தடுப்பு புரட்சி இயக்கம் (கெரா) நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் சுல்கிப்ளி கூறினார்.
அதிகமான தனிப்பட்டவர்கள் ஊழல்கள் பற்றி எம்எசிசியிடம் புகார் செய்கின்றனர். ஆனால் புகார் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக இல்லை. நிறுவனங்களும் ஊழல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றன. ஆகையால், அவர்களும் புகார் செய்வதன் வழி அவர்களுடையப் பங்கை ஆற்ற வேண்டும். ஊழலை எதிர்த்து போராடுவது எம் எசிசியின் பொறுப்பு மட்டுமல்ல, சமுதாயமும் செய்ய வேண்டும் என்றாரவர்.
கெரா இயக்கம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் ஒரு திட்டம். மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் எம்எசிசி அதிகாரிகள் பொதுமக்களைச் சந்திப்பார்கள். நாடுதழுவிய அளவில் சுமார் 2,000 எம்எசிசி அதிகாரிகள் களமிறங்கி மக்களைச் சந்திப்பார்கள்.
இன்னொரு திட்டம் “Jangan Hulur, Jangan Kawtim, Jangan Settle, அல்லது 3Js, இன்று பின்னேரத்தில் பெட்டாலிங் ஜெயாவில் தொடங்கப்படும் என்று சுல்கிப்ளி மேலும் கூறினார்.
இதன் நோக்கம் மக்கள் ஊழலை வெறுக்க வேண்டும் என்பதோடல்லாமல் ஊழலுக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு அதை எதிர்க்கும் நடவடிக்களை எடுக்க வேண்டும் என்று மக்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதாகும் என்றாரவர்.
கொடுக்காதீர்”, “தீர்த்துகொள்ளாதீர்” என கெரா இயக்கத்தை எம்எசிசி தொடங்கி இருப்பதை கூர்ந்து கவனித்தோமானால், எம்எசிசி ஊழலை ஒழிக்க முற்படுகிறதா அல்லது மக்களிடத்தில் ஊழலை ஞாபகப்படுத்தி கொண்டிருக்க முயல்கிறதா என்ற சந்தேகம்தான் எழுகிறது.
கொடுக்காதீர்”, “தீர்த்துகொள்ளாதீர் இயக்கம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் அப்பாவி மக்களுக்கு பாதகமாக இருக்கும் விதிமுறைகளயும் சட்டங்களையும் அகற்றுங்கள். ஊழால் தானே ஒழியும்.
ஊழல்வாதிகளை எல்லா அரசு அலுவலகங்களிலும் வைத்துக்கொண்டு கொடுக்காதீர்கள் என்றால் எப்படி முடியும்? தலையில் இருந்து அடிகால் வரை ஊழல் என்றால் மக்கள் எப்படி தினசரி காரியங்களை செய்ய முடியும்? இந்த நாதாரிகளுக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை–பேருக்கு வாங்கும் சம்பளத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமே- அதுதான் இந்த அறிவுரை–இதிலிருந்து தெரிய வில்லையா எப்படி பட்ட ஈனங்கள் பதவியில் உட்கார்ந்து இருக்கின்றனர் என்று? என்னுடைய 18000rm வருமான வரியிலிருந்து காணாமல் போய் விட்டது–யாரை கேட்க முடியும்? திருட்டு கம்மனாட்டிகள்.