நுருல் இஸ்ஸாவின் ஐஜிபி, இஸ்மாயிலுக்கு எதிரான வழக்கு மத்தியஸ்திற்கு செல்கிறது

 

Nurulcaseformedidationபோலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் ஆகியோருக்கு எதிராக லெம்பா பண்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா தொடுத்திருந்த அவதூறு வழக்கை மத்தியஸ்திற்கு கொண்டு போகுமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு அந்த வழக்கை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வது சாத்தியமா என்பததைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் மத்தியஸ்திற்கு செல்வது வழக்கமான நடைமுறை என்று நூருல் இஸ்ஸாவின் வழக்குரைஞர் எஸ். சிவராசா கூறினார்.

இந்த வழக்கில் அந்த வழக்கமான முறை பின்பற்றப்படாததால், வழக்கை மத்தியஸ்திற்கு கொண்டுசெல்லுமாறு நீதி ஃபைஸா ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.

மத்தியஸ்தம் தோல்வியில் முடிந்தால், வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

சூலு இளவரசி என்று கூறிக்கொண்ட ஜாசெல் கிராம் என்பவருடன் இஸ்ஸா காணப்படும் புகைப்படும் வெளியானதைத் தொடர்ந்து பிரதிவாதிகளான ஐஜிபியும் அமைச்சரும் தெரிவித்த கருத்தில் அவர்கள் பயன்படுத்திய சொற்கள் இஸ்ஸாவுக்கும் சாபாவில் 2013 ஆம் ஆண்டில் நடந்த சூலு ஊடுருவலுக்கும் தொடர்பு உண்டு என்று மறைமுகமாக குறிப்பிட்டிருந்தாக இஸ்ஸா கூறிக்கொள்கிறார்.