தெய்வ நிந்தனை குற்றத்திற்காக ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைக்காவல்

 

twoyearsfor ahokஇஸ்லாத்திற்கு எதிராக தெய்வ நிந்தனை குற்றம் புரிந்ததற்காக இந்தோனேசியா, ஜாக்கர்த்தாவின் கிறிஸ்துவ ஆளுனர் ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் நெருங்கிய நண்பரான ஆஹோக் ஒரு சீன வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஆவார். ஜாக்கர்த்தா ஆளுனர் பதவிக்கு இன்னொரு தவணைக்கு போட்டியிட்ட அவரை எதிர்த்து இஸ்லாமிய சமய ஆதரவாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவற்றின் விளைவாக பாஸுகி டிஜாஹாஜா பூர்ணமா என்ற இயற்பெயரைக் கொண்ட ஆஹோக் தேர்தலில் தோல்வி கண்டார்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நீதிமன்றத்திற்கு வெளியில் கூடியிருக்கையில், தெற்கு ஜாகர்த்தா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திவியர்சொ புடி சந்தியார்த்தோ அளித்த தீர்ப்பில் ஆஹோக் கிரிமினல் தெய்வ நிந்தனை குற்றம் புரிந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்காக அவருக்கு நீதிமன்றம் ஈராண்டு சிறைக்காவல் தண்டனை விதிக்கிறது என்று கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

ஆயிரக்கணக்கான போலீசார் தலைநகரில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக பூர்ணிமா நீதிமன்றத்திடம் கூறினார்.