அருள் கந்தா அகற்றப்பட்டதற்கு பிரதமருடனான தகராறு காரணமா?, பாஸ் தலைவரின் ஊகம்

 

pasonarul1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி பண்டார் மலேசியா செண்ட் பெர்ஹாட் மற்றும் டிஆர்எக்ஸ் சிட்டி செண்ட். பெர்ஹாட் ஆகியவற்றில் அவர் வகித்த முக்கிய பதவிகளிலிருந்து அகற்றப்பட்டதற்கு அவருக்கும் பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான உறவில் கசப்பேற்பட்டு விட்டதா என்ற வியப்பில் இருக்கிறார் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம்.

பண்டார் மலேசியா ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து 1எம்டிபி பற்றி ஒரு முக்கியமான அறிவிப்பு விரைவில் செய்யப்படும் என்று அருள் கந்தா மக்களவை பாரிசான் நேசனல் பின் இருக்கை உறுப்பினர்களிடம் கூறியிருப்பதை துவான் இப்ராகிம் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் கையாள்வதில் அடைந்த வெற்றியை வெளிப்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.

“கேள்வி – அருள் கந்தா எதைப்பற்றி அறிவிப்பு செய்யப் போகிறார்? இந்த அறிவிப்பு பிரதமரின் ஆதரவைப் பெறவில்லை என்பது சாத்தியமா?”, என்று துவான் இப்ராகிம் கேட்கிறார்.