மலேசியா வரி விதிப்பு விழுக்காட்டினை குறைத்துக்கொண்டால் பொருளாதாரம் வலுப்பெறும், பொருளாதார நிபுணர் டென் மிச்சேல்

danமலேசிய அரசு அதன் வரிவிதிப்பின் விழுக்காட்டை குறைத்துக் கொண்டால் இந்நாட்டின் வருமானம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறுவதோடு கூடும் என புக ழ் பெற்ற பொருளாதார நிபுணர் டென் மிச்சேல் (Dan Mitchell) தமது பொருளாதார ஆய்வு கட்டுறையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இம்மாதிரி பல நாடுகள் குறிப்பாக நமது அண்டை நாடுகள் குறைந்த விழுக்காட்டு வரிவிதிப்பின் மூலம் தங்களது நட்டின் வருமானத்தை பெருக்கிக் கொண்டு பொருளாதாரத்தை வலுவடையச் செய்துள்ளன என்பதை மேற்கோள் காட்டிய அவர் இதனை மலேசியாவும் பின்பற்றி  அதன் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கருத்துறைத்தார்.

தற்போது மலேசியாவில் 24% வணிக வரி, 28% கூடியபட்ச தனிநபர் வரி மேலும் பொருள் மற்றும் சேவை வரி (GST) 6% விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.