மலேசியாவில் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்

kidneyமலேசியாவில் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர், ஒவ்வொரு ஆண்டும் 6,000 புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டறியப் படுகின்றனர்.

துணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்ய தெரிவிக்கையில் தமது அமைச்சின் கணிப்பீட்டின்படி தற்போது மலேசியாவில் ஒன்றாம் முதல் ஐந்தாம் நிலை வரையிலான சிறுநீரக நோயாளர்கள் 4 லட்சம் பேர் உள்ளதாகவும் அவர்களில் 40,000 பேர் ஐந்தாம் நிலை சிறுநீரக நோயாளர்கள் எனவும் இவர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிட்சை (Dialysis) செய்யப் படுவதாகவும் இதற்காக அரசு ஆண்டுக்கு 160 கோடி வெள்ளி வரை ஒதுக்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஒரு சிறுநீரக நோயாளியின் சிகிட்சைக்கு ஆண்டுக்கு 40,000 வெள்ளி வரை தேவைபடும் என அவர் தெரிவித்தார்.