கெடா மாநிலத்தில் ஆண்டு தொடக்கம் 6 மே வரை 513 பேருக்கு டெங்கி காய்சல் கண்டுள்ளது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 206 பேர் அதிகரித்துள்ளனர்; அதாவது 67.1 விழுக்காடு அதிகமாகும்.
இவ்வாண்டு கெடாவில் இதுவரை டெங்கி காய்ச்சலால் மூவர் மரணமுற்றுள்ளனர் என மாநில சுகாதாரத்துரை உயரதிகாரியான டத்தோ டாக்டர் நூர்ஹீசான் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதோடு சிக்குங்குன்யா ( Chikungunya) காய்ச்சல் அம்மாநிலத்தில் ஆண்டு தொடக்கம் 6 மே வரை 128 நபர்களுக்கு பீடித்ததாக அவர் தெரிவித்தார்.