71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அம்னோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்ட மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அக்கட்சி ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
“அதிகமான (நாடாளுமன்ற) இடங்களைக் கொண்ட கட்சி என்ற முறையில், நாட்டின் நிர்வாகத்துக்கும் முன்னேற்றத்துக்கும் கொள்கைகள் வகுப்பதில் (அம்னோ) தலைவர்களுக்கு முக்கிய பங்குண்டு”, என எம்ஏசிசி ஓர் அறிக்கையில் கூறியது.
அம்னோ தலைவர்கள் நேர்மையுடன் கடமையைச் செய்து ஊழல், அதிகாரமீறல் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.
“அம்னோ தலைவர்கள் ஊழல், அதிகாரமீறல் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதற்கு முக்கியத்துவம் அளித்து நாட்டின் நிர்வாகத்தை மேற்கொள்ளப்போகும் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும்”, என்றது கூறிற்று.
சமீபத்தில் முப்தி ஒருவர் GST HARAM என்று கூறியிருக்கிறார்.
அவர் கூற்றுப்படி GST வரி என்ற பெயரில் மக்களிடமிருந்து அரசாங்கமே ஊழலை பெறுகிறதே என்ற வேதனையில் எம்ஏசிசி இப்படி எல்லாம் அம்னோவை வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த அறுபது ஆண்டுகளாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் என நாட்டையே பல்லாங்குழி விளையாடி கெடுத்து குட்டிச்சுவராக்கியதே அம்னோதான். இதனை MACC ஞாபகப்படுத்துவது போல உள்ளது இந்த செயல்.
அரசாங்சப் பணிகளில் 99 % விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அமர்த்தப்பட்ட பின்னரே இலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எம்.ஏ.சி.சி யால் கைது செய்யப்படும் “தலை”களைக் கொண்டே நாம் இதை யூகிக்க முடியும். கோழி முட்டை திருடுபவர்களுக்கே எம்.ஏ.சி.சிவலைவிரிக்கிறது.முதலைகளுக்கும்,அனாக்கொண்டாக்களுக்கும் தேவையான வலை இன்னும் தயாரிக்கப்படவில்லையோ?
இனி வரும் காலத்தில் அரசின் பெரிய பொறுப்புக்களில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளும் அரசாங்க மந்திரிகளும் எளிய வாழ்க்கை வாழ்வதை கட்டாயமாக்க வேண்டும் .
அவர்கள் proton காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.வீடுகளும் சராசரி மனிதனுடைய வீட்டைப்போன்று சிறியனவாகவே இருக்க வேண்டும்.அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும் .இதை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் பதவிக்கு வரக்கூடாது என்பது சட்டமாக்கப்பட வேண்டும் .இவர்களது அளவுக்கு மீறிய ஆசைகளே இன்றைய நாட்டின் நிலைமைக்கு காரணம் .