மலாக்கா போலீசார் சீரியாவில் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடியுடன் தொடர்புள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் அம்மாநிலத்தில் இல்லை என்று உறுதியாக நம்புகிறார்கள்.
என்றாலும் போலீசார் விழிப்பாக இருந்து கண்காணிப்பைத் தொடர்வார்கள் என மாநிலப் போலீஸ் தலைவர் அப்துல் ஜலில் ஹசன் கூறினார்.
“அந்த ஐஎஸ் போராளியின் சொந்த ஊரான மஸ்ஜிட் தானாவைக் கண்காணித்து வருகிறோம். ஐயத்துக்கிடமான அல்லது ஐஎஸ்-தொடர்புள்ள நடவடிக்கை எதையும் காணவில்லை”, என்றாரவர்.
பொதுமக்களும் தகவலளித்து ஒத்துழைக்கிறார்கள், அதனால் எந்தப் பிரச்னையானாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம் என அப்துல் ஜலில் தெரிவித்தார்.
முஸ்லீம் நாடான பங்களாதேஷ் தீவிரவாதி என்று அறிவித்த ஷாக்கீர் நாயkku பாதுகாப்பு வழங்கி கொண்டு,
முகம்மட் வாண்டியை பயங்கரவாதி என்று போலீஸ் குறிப்பிடுவது, ஒரு காகம் மற்றொரு காகத்தை பார்த்து நீ கருப்பு என்று கூறுவதுபோல் உள்ளது.