மலேசிய கால்பந்து சங்கத் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஆசிய கிண்ண தகுதிப் போட்டியில் மலேசியா வட கொரியாவை பியோங்காங்கில் சந்தித்து விளையாடுவதை விரும்பவில்லை.
ஜோகூர் பட்டத்திளவரசருமான துங்கு இஸ்மாயில், ஆட்டக்காரர்கள் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு நடுநிலையான இடத்துக்கு ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆட்டத்தில் கலந்துகொள்ள மலேசியா மறுத்தால் அது பலவற்றை இழக்க நேரலாம் என்றாரவர்.
“எப்ஏஎம் (ஆட்டக்காரர்களும் அதிகாரிகளும்) பியோங்காங் செல்ல அனுமதி அளிக்கவில்லை என்றால் வட கொரியா 3-0 என்ற நிலையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். நமக்கு யுஎஸ்$50,000 அபராதம் விதிக்கப்படும். ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து நீக்கப்படுவோம்.
“அதைவிட மோசமாக எதிர்காலத்தில் எல்லா ஏஎப்சி ஆட்டங்களிலும் கலந்துகொள்ள முடியாதபடி தடுக்கப்படலாம். எனவே, என்ன செய்யப் போகிறோம், இதுதான் இப்போதைய கேள்வி”, என ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் துங்கு இஸ்மாயில் பதிவிட்டுள்ளார்.
தோற்பது உறுதி, பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் எப்படி விளையாட முடியும்.எனினும் விளையாடிதான் ஆக வேண்டும் இல்லையேல் பின் விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும் .
எப்படியும் மண்ணை கவ்வ போவது உறுதி.
அதற்கு என்ன காரணமா இருந்தா என்ன ?
ஆட தெரியாதவன் மேடை கோணல் என்று கூறுவது சகஜமே.