ஆஸி குடியுரிமை வைத்திருந்த டிஏபி பிரதிநிதி சரவாக் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்

1 dapசரவாக்   சட்டமன்ற   உறுப்பினர் (டிஏபி- புஜுட்)   திங்   தியோங்   சூனின்   பதவி    பறிக்கப்பட்டது.

திங்   ஆஸ்திரேய   குடியுரிமை   வைத்துள்ளதால்    அவரைச்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து   அகற்ற    வேண்டும்   என்று   சரவாக்   அனைத்துலக   வாணிக,  மின் -வர்த்தக   அமைச்சர்   வொங்   சூன்   கோ (பிஎன் -பாவாங்   அசான்)    கொண்டுவந்த   தீர்மானம்         70-10   என்ற   வாக்கு  வேறுபாட்டில்   ஏற்கப்பட்டு    திங்கின்  பதவி   பறிக்கப்பட்டதாக   சீ  ஹுவா   ஆன்லைன்   கூறிற்று.

வெளிநாட்டுக்  குடியுரிமை   வைத்துள்ள   ஒருவர்   சரவாக்   சட்டமன்ற   உறுப்பினராக   இருக்க   முடியாது   என்று  கூறும்     சரவாக்   அரசமைப்பு   பகுதி   17(1) (ஜி)  கூறுவதை   வொங்   சுட்டிக்காட்டினார்.

திங்  2010,  ஜனவரி  20-இல்   ஆஸ்திரேலிய   குடியுரிமையைப்   பெற்றாராம்.

திங்   பதவி   அகற்றப்பட்டதால்   அவருடைய   தொகுதியில்   ஓர்  இடைத்  தேர்தல்    நடக்கும்  சாத்தியம்    உள்ளது.