நஜிப்புக்கு எதிராக கைருடின், மாத்தியாஸ் வழக்கு

 

KairuddinMathisஅவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட கைருடின் அபு ஹசான் மற்றும் வழக்குரைஞர் மாத்தியாஸ் ஆகிய இருவரும் தங்களை பாதுகாப்புச் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்காக பிரதமர் நஜிப்புக்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நஜிப், ஐஜிபி காலிட் அபு பாகார், துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும் அட்டர்னி ஜெனரல் முகமட் அபாண்டி அலி ஆகியோருக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்படும் என்று கைருடினின் வழக்குரைஞரான ஹனிப் காத்ரி அப்துல்லா கூறினார்.

“இவர்கள் அனைவரும் எனது கட்சிக்காரர் கைருடின் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்”, என்று ஹனிப் கூறினார்.

இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் கைருடின் மற்றும் மாத்தியாஸ் சாங் ஆகிய இருவரையும் 1எம்டிபி பற்றி 5 நாடுகளில் புகார்கள் செய்து நிதி நாசவேலையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.