இசியின் மலாக்கா தொகுதிமறுவரைவு முன்மொழிதலை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது

 

MalaccaECமலாக்கா மாநிலத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் தொகுதிமறுவரைவு முன்மொழிதலை மலாக்கா உயர்நீதிமன்றம் தல்ளிவைத்துள்ளது.

இன்று, நீதிபதி வாஸீர் அலாம் மைடின் மீரா அவரது அறையில் இந்த வழக்கு விசாரணக்கு ஜூன் 14 ஆம் தேதியை நிர்ணயித்தார் என்று என்எஸ்டி செய்தி கூறுகிறது.

“இது குறைந்தபட்சம் தொகுதிமறுவரைதலை இந்த விவகாரம் முறையாக நீதிமன்றத்தில் விவாதித்து முடிவு தெரியும் வரையில் தடுத்து வைத்துள்ளது”, என்று சமூக ஆர்வலர் சான் திசு சோங் கூறினார். இவர் வழக்குத் தொடுத்த ஏழு வாதிகளில் ஒருவராவார். இந்த வழக்கு ஏபரல் 4 இல் பதிவு செய்யப்பட்டது.

நியோ லீ எக்சின், 31, அஸுரா தாலிப், 40, லிம் கா செங், 31, நோரிஸாம் ஹசான் பாக்தி, 51, அமிர் கைருடின், 53, மற்றும் அமரான் அதான், 47 ஆகியோர் இதர ஆறு வாதிகள் ஆவர்.

இந்த எழுவரையும் வழக்குரைஞர் அம்பிகா சீனிவாசன் பிரதிநிதித்தார்.