ஊழல் குறித்து புகார் செய்ய ஒரு இணையத்தளம்: சி4 தொடங்கியது

c4ஊழல்   நடவடிக்கைகளைக்  கண்காணிக்கும்   சி4,  வரவுமீறிய    ஆடம்பர   வாழ்க்கை   வாழும்   பிரமுகர்கள்   குறித்து    பொதுமக்கள்   புகார்    செய்வதற்காகவே    ஒரு   இணையத்தளத்தைத்   தொடங்கியுள்ளது.

Kleptocrazy.my  என்னும்  இணையத்தளத்தில்  புகார்களைப்  பதிவிடலாம்.   தங்கள்   குற்றச்சாட்டுகளுக்கு    ஆதாரங்களாக     படங்கள்,  காணொளிச்    சான்றுகளையும்  பதிவிடலாம்.

இவை  மலேசிய    ஊழல்தடுப்பு   ஆணையத்தின்   கவனத்துக்குக்   கொண்டு   செல்லப்பட்டு   அவைமீது   விசாரணை    மேற்கொள்ள   போதுமான    ஆதாரம்   இருக்கிறதா   என்று   ஆராயப்படும்     என    சி4  செயல்   இயக்குனர்  சிந்தியா   கேப்ரியல்   கூறினார்.

புகார்   செய்வோர்   தங்கள்   பெயர்களைத்   தெரிவிக்க    வேண்டிய   அவசியமில்லை.