அன்வார்: பிகேஆர்-பாஸ் உறவுமுறிவுக்கு கூறப்படும் காரணம் சரி இல்லை

anwarபாஸ்   பிகேஆருடன்   உறவுகளை   முறித்துக்  கொண்டதற்குக்  கூறும்   காரணம்    ஏற்புடையதாக    இல்லை    என   அன்வார்   இப்ராகிம்   கூறுகிறார்.

ஷியாரியா   குற்றவியல்   சட்டங்களில்  திருத்தம்   கொண்டுவரும்  பாஸ் தலைவர்   அப்துல்     ஹாடி     ஆவாங்கின்   முயற்சிகளுக்கு    பிகேஆர்    ஆதரவு    தெரிவிக்கவில்லை     என்று    அது   குற்றஞ்சாட்டியிருப்பது   “உண்மையல்ல”   என்று     அன்வார்   கூறினார்.

“நானும்   பிகேஆர்    தலைவரும் (டாக்டர்   வான்  அசிசா  வான்  இஸ்மாயில்)  விடுத்த     அறிக்கையில்   தீர்மானம்  கொண்டுவர    ஹாடிக்குள்ள   உரிமையை   மதித்து   அது   நாடாளுமன்றத்   தேர்வுக்  குழுவிடம்   தாக்கல்    செய்யப்பட    வேண்டும்    என்று   குறிப்பிட்டிருப்பதை    பாஸ்   தலைவர்கள்   முறையாக   படிக்கவில்லை    என்பது   தெளிவாக   தெரிகிறது.”,  என   சிறைவாசம்  செய்யும்   பிகேஆர்   நடப்பில்   தலைவர்    இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

வியாழக்கிழமை   பிகேஆருடன்   உறவுகளை  முறித்துக்கொள்வதென்று    பாஸின்  ஷியுரா   மன்றம்   முடிவு   செய்தபோது   அதற்குக்  குறிப்பிடப்பட்ட   காரணங்களில்   பிகேஆர்  ஹாடியின்  தீர்மானத்தை    ஆதரிக்காததும்   ஒன்றாகும்.

பிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்    அரசாங்கமே   ஷியாரியா   சட்டத்  திருத்த  தீர்மானத்தை   நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யும்    என்று  கூறி   பின்னர்     அப்படிச்    செய்யாது    என்றார்.

“அப்போது  யாரும்  அம்னோவைக்  குறை   சொல்லவில்லை”,   என்றார்  அன்வார்.