டிஎபியின் தொல்லைகளை நிறுத்துவதற்காக பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சிக்குழுவில் இருப்பார்கள் என்று பாஸ் சிலாங்கூர் கமிஷனர் சாலேஹென் முக்கீ கூறிக்கொண்டார்.
பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து அதன் உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படாததற்கு இதுதான் பாஸ் கட்சியின் மிக அண்மைய விளக்கம்.
டிஎபி இதைத்தான் செய்துள்ளது. வரலாறு இதை நிரூபிக்கிறது. பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து டிஎபி விலகிக் கொண்டபோது அதன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி துறக்கவில்லை.
அது குறித்து டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிடம் கேட்டதற்கு, பாஸ் கட்சியின் தொல்லைகளை தடுப்பதற்கு டிஎபி தொடர்ந்து ஆட்சிக்குவில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக சாலேஹன் கூறிக்கொண்டார்.
ஆகவே, நற்பணியாற்ற பாஸ் தொடர்ந்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இருக்க வேண்டும் என்று சாலேஹன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
சிலாங்கூரில், அடுத்த மாநில ஆட்சி அம்னோதான் என்பது உறுதியாகிவிட்டது. இந்த மாற்றம், நஜிப்பின் நரித்தந்திரம் ஒருபுறமிருக்க, திரைமறைவில் லிம் கிட சியாங்கும், அவரது மகனும் செய்த சதி வேலை பயங்கரமானது.
அமீனோ சொல்லிக் கொடுத்தபடி அசைந்தாடி கொடுக்கும் ‘லாலாங்’ புல்லோ இக்கட்சி?