சரவாக் மாநிலத்தில் புஜுட் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் அத்தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பாரிசான் நேசனல் கைப்பற்றும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தொகுதியை பின் வெற்றி கொண்டால், சரவாக் சட்டமன்றத்தில் அதன் எண்ணிக்கை தற்போதைய 72 லிருந்து 73 க்கு உயரும் என்றாரவர்.
கடந்த மே 12 இல், சரவாக் சட்டமன்றம் அதன் டிஎபி உறுப்பினர் டிங் தியோங் சூன் இரு குடியுரிமைகள், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா, பெற்றிருந்ததற்காக அவரை அம்மன்றத்தின் உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என்று அறிவித்தது.
இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் சாஹித் உங்கள் — விளையாடாத என்ன?
இத்தொகுதியில் BN வெல்வது சிரமம். சரவாக் மாநிலத்தின் வடக்கு புறத்தில் உள்ள மீரி மாநகரமே இந்த புஜுட் சட்டமன்ற தொகுதி. 65% சீனர்கள், 20% மலாய்க்காரர்கள், 13% பிடாயு மக்கள். பெட்ரோலியம் வளம் கொண்ட தொகுதி இது. இங்கே ஆளும் கட்சி எளிதில் எவரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. சென்ற தேர்தலில் 1,759 வாக்கு வித்தியாசத்தில் DAP வென்றது. அரசாங்கத்தை நம்பி பிழைப்பு நடத்தும் நிலைமை இங்கே எவருக்கும் இல்லை. 200 இந்திய வாக்காளர்கள் இங்கே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள். உரித்த நெத்திலி ஒரு கிலோ 7 வெள்ளிதான். அங்கே போகும்போதெல்லாம் குறைந்தது 3 கிலோ வாவது வாங்காமல் வரமாட்டேன். இடைத்தேர்தல் நடந்தால் குறைந்தது 600 வாக்கு வித்தியாசத்திலாவது DAP ஜெயிக்கும். பெரும்பான்மை குறைவதற்கு காரணம், DAP காரர்கள் எங்கேயும் உருப்படியாக தொகுதியில் வேலை செய்ய மாட்டார்கள்.