எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து ரிம42 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றி விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மீதான விசாரணையை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் ஒரு மாதத்துக்குள் முடித்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.
சட்டத்துறைத்துறை(ஏஜி)த் தலைவர் அபாண்டி அலி இதைத் தெரிவித்தார். புத்ரா ஜெயாவில் 17வது ஆசியான் உயர் சட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஏஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“ஒரு மாதத்தில் முடிவடையலாம்.
“விசாரணையின் முடிவு எனக்குத் தெரியாது. நான் அதை இன்னும் பார்க்கவில்லை”, என்று அபாண்டி தெரிவித்தார்.
“SPRMInsider” என்னும் இணையத்தளத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேசனலின் பணம் அம்னோ தொடர்புள்ள பல தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சென்றுள்ளதாகக் கூறப்பட்டிருப்பது குறித்து வினவியதற்கு அபாண்டி பதிலளிக்க மறுத்தார்.