பாஸ் எக்ஸ்கோகள் சிலாங்கூர் சுல்தான் பின்னே ஓடி ஒளியக்கூடாது: மாபுஸ்

exco சிலாங்கூர்   ஆட்சிக்குழுவில்    இடம்பெற்றுள்ள   மூன்று  பாஸ்   கட்சியினர்   அதிலிருந்து   விலக    சிலாங்கூர்   சுல்தான்   ஒப்புதலுக்காகக்   காத்திருக்க   வேண்டியதில்லை  என    பாஸ்    துணைத்      தலைவர்     துவான்    இப்ராகிம்    துவான்   மானுக்கு    கட்சியின்   இன்னொரு    தலைவர்    அறிவுறுத்தியுள்ளார்.

ஏனென்றால்,       சிலாங்கூர்   அரசுக்குத்    தலைமை  ஏற்றுள்ள   பிகேஆருடன்   உறவுகளைத்   துண்டித்துக்  கொள்ள    முடிவு     செய்தது   பாஸ்தான்  என்பதை     பொக்கோ  சேனா    எம்பி    மாபுஸ்   ஒமார்   சுட்டிக்காட்டினார்.

பாஸ்    அதன்   தோழமைக்   கட்சிகளான     பிகேஆரும்    டிஏபியும்    “பாஸை   வஞ்சித்து   விட்டதாலும்  பாஸின்    திட்டங்களை    எதிர்த்ததாலும்”  பாஸ்  அவற்றுடன்   உறவுகளை   முறித்துக்கொள்வதென    முடிவு     செய்தது  என  அதன்  நாடாளுமன்ற   உறுப்பினர்களில்   ஒருவரான   மாபுஸ்    இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

“அதாகப்பட்டது     பாஸுக்கும்   அவ்விரு   கட்சிகளுக்கும்    இனி    எந்தத்    தொடர்பும்  இல்லை    என்பது   இதன்   பொருள்.  அவ்விரு  கட்சிகள்  தலைமையேற்றுள்ள    அரசுகளுக்கும்   இது   பொருந்தும்.

“இப்படிப்பட்ட    நிலையில்   ஷியுரா   மன்றம்   (உறவுகளைத்  துண்டித்துக்கொள்ள)  முடிவு    செய்தவுடனேயே   பாஸ்   எக்ஸ்கோ-கள்  பதவி  விலகியிருக்க    வேண்டும்”,  என்றாரவர்.

சிலாங்கூர்  மந்திரி   புசார்  அஸ்மின்   அலி  பாஸ்   எக்ஸ்கோகளை    விலகுமாறு    கேட்டுக்கொண்டார்    என்று   கூறப்படுவது   குறித்து   கடந்த    சனிக்கிழமை    கருத்துரைத்த   துவான்  இப்ராகிம்  “சுல்தானின்   ஒப்புதலுடன்  அவர்   அவ்வாறு    கேட்டுக்கொண்டிருக்கும்  பட்சத்தில்   பாஸ்     அதை   ஏற்கும்”,  என்று   குறிப்பிட்டதாக    ஸ்டார்   ஆன்லைன்    அறிவித்திருந்தது.   அதன்   தொடர்பில்தான்   மாபுஸ்   இவ்வாறு   கூறினார்.