பிகேஆரின் உயர் தலைவர்கள் நாளை ஒன்று கூடுகிறார்கள். அக்கூட்டத்தில் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இனி பாஸின் பங்கு என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாஸ் எக்ஸ்கோ-கள் மூவரைச் சந்தித்தபோது நடந்தது என்னவென்பதை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தம்மிடம் விவரித்திருப்பதாக சைபுடின் சொன்னார்.
“நாளைய கூட்டத்தில் அது விவாதிக்கப்படும்”.
மற்றொரு நிலவரத்தில் கட்சி மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் நடைபெறும் என்றும் சைபுடின் தெரிவித்தார்.
பாஸ் ஆதரவோடுதான் அஸ்மின் மாநில மந்திரி பெசாராக அமர நேர்ந்தது இப்ப பாஸ் கட்சியுடன் எப்படி உறவை முடித்துக்கொள்ள முடியும் எல்லாம் ஒரே நாடகம்தான்…