மலாய்க்காரர் உரிமைக்காகப் போராடும் பெர்காசா இன்று மஇகாவுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளது. மஇகா முஸ்லிம்களின் உணர்ச்சிகளை மதிக்கவில்லை என்று அது கூறிக்கொண்டது.
மஇகாவை நிராகரிக்கக் கோரும் பரப்புரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் தொகுதியான சிகாமட்டில் தொடங்கும் என்று பெர்காசாவின் தலைமைச் செயலாளர் ஸைட் ஹசான் ஸைட் அலி கூறினார்.
ஸக்கீர் நாய்க் இஸ்லாமிய அரசுக்காக (ஐஎஸ்) மலேசியாவில் உறுப்பினர்களைத் திரட்டுகிறார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மஇகாவின் பொருளாளர் எஸ். வேள்பாரி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து பெர்காசா இந்த மஇகா எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஸக்கீர் பெர்காசாவின் கௌரவ உறுப்பினர். மஇகாவின் அறிக்கை பெர்காசாவை அவமானப்படுத்துவதாகும் என்று ஸைட் அலி கூறினார்.
வேள்பாரியின் அறிக்கை பெர்காசா ஐஎஸுடன் குலவுவதாக தெளிவாகக் கூறுகிறது. “அது துடுக்குத்தனமானதோடு அடிப்படையற்றது. நாங்கள் எங்களுடைய பொறுமையை இழந்து விட்டோம்”, என்றாரவர்.
“இது ஒரு மிகக் கொடிய அறிக்கை, மலாய்க்காரர்களின் ஆதரவு வாக்குகளால் மட்டும் இருக்கைகளை வென்ற ஓர் அற்பமான கட்சியின் தலைவரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது…அவர் இன்னலைத் தேடுகிறார்”, என்று பெர்காசா தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஸைட் ஹசான் கூறினார்.
வேள்பாரியின் அறிக்கை மலாய்க்காரர்கள் 14 ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு வாக்களிப்பதைத் தடை (ஹராம்) செய்கிறது.
“மஇகா இஸ்லாத்தை அவமதித்துள்ளதால் மஇகாவுக்கு வாக்களிப்பது ஹராம் என்று நாங்கள் முஸ்லிம்களிடம் கூறுவதற்கு பரப்புரை செய்வோம்”, என்று அவர் மேலும் கூறினார்.
பெர்காசாவை ஐஎஸுடன் தொடர்புபடுத்தியதற்காக வேள்பாரி மன்னிப்பு கோர வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் டில்லி உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு தீர்ப்புமன்றம் (Indian Judicial Tribunal) கூறியுள்ளத்தைத்தான் தமது அறிக்கையில் கூறியிருப்பதாக வேள்பாரி தெரிவித்தார்.
தமக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரும்படி பெர்காசாவுக்கும் ஸக்கீருக்கும் வேள்பாரி சவால் விட்டார்.
இதை ம இ க கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இது ஒரு மிகக் கொடிய அறிக்கை, மலாய்க்காரர்களின் ஆதரவு வாக்குகளால் மட்டும் இருக்கைகளை வென்ற ஓர் அற்பமான கட்சியின் தலைவரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது…அவர் இன்னலைத் தேடுகிறார்”, என்று பெர்காசா தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஸைட் ஹசான் கூறினார்.
சிரியாவில் கொல்லப்பட்டானே முகமட் வாண்டி அது ஏன் சாகிர் நாயக்கின் தூண்டுதலாக இருக்க முடியாது? இப்படி நாட்டுப்பற்று இல்லாமல் பேசுவது இஸ்லாமிற்கு எதிரானது என்று நண்பர் அறியாரோ!
என்ன மலாய்க்கார உரிமை என்று எனக்கு புரிய வில்லை– இதெல்லாம் மனோதத்துவ வழிகள்- இல்லாத ஒன்றை இருக்கிறது என்று காண்பித்து நம்மை மடையர்கள் ஆக்கி நம்மை மேலும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கவே எல்லாம்– எல்லாம் யாருடைய பின் விளையாட்டு என்று நினைக்கிறீர்கள்? பொருளாதாரத்தில் இன்னும் 30 % சதவீதம் இல்லை என்று பறைசாற்றி இருந்தாலும் உண்மை நிலை என்ன? 1957 க்கும் இன்றைய நிலைக்கும் என்ன வேறுபாடு என்று சிறிது சிந்தித்து பார்த்தால் புரியும் எவ்வளவு மற்ற இனங்கள் சுரண்டப்பட்டு இருக்கின்றார்கள் என்று. இந்த நாதாரிகள் நம்பிக்கை நாயகனின் பில்லியனில் தூண்டப்பட்டு எல்லா உரிமைகளும் இருக்கும் (பேருக்காவது) நம்மை அந்த சாக்கடை சாக்கிருக்கும் கீழே நம்மை பார்க்க இவ்வளவு முயற்சி எடுக்கும் perkaasa நாதாரிகள். MIC இன்னும் என்னதான் புடிங்கி கொண்டு இருக்கிறார்களோ?
ஸக்கீர் விவகாரத்தில் மஇகாவுக்கு எதிராக பெர்காசா போர் முரசு என்றால் நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரத்தை துவக்க பெர்காசா தயாராகி விட்டது.
அப்படியானால் அம்னோவால் முத்தம் கொடுத்து தயாராகிய KRIS -ன் கூர்முனை மழுங்கி போய்விட்டது என பெர்காசா நினைக்கிறதா ?
“மஇகா இஸ்லாத்தை அவமதித்துள்ளதால் மஇகாவுக்கு வாக்களிப்பது ஹராம் என்று நாங்கள் முஸ்லிம்களிடம் கூறுவதற்கு பரப்புரை செய்வோம்”, என்று பெர்காசா கூறினால்,
“GST HARAM என்று ஒரு முஸ்லீம் முப்தி கூறியதைஉதாரணம் காட்டி நடப்பு BN அரசாங்கத்திற்கு வாக்களிப்பதும் ஹராம் என்று நாங்கள் முஸ்லிம்களிடம் பரப்புரை செய்வோம்”, என மஇகாவும் அம்னோவுக்கும், அம்னோ வளர்த்து வரும் பெர்காசாவுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும்.
அரசாங்கத்தில் ஓர் அங்கம் ம.இ.கா. இதை பெர்காசா மறந்ததது ஆச்சர்யமல்ல. ஆனால் ம.இ.கா காரனே இதை மறந்து _ட்டை சுருங்கி விழி பிதுங்கி நிற்பது தான் அற்பமான செயல். கண்டவனும் முதுகில் குத்துவதை புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்வதும், அறைந்தவனை மன்னிப்பதும் ‘மன்னிப்போம், மறப்போம்’ செயல் அல்ல, கையாளாகாத்தனம். அரசியல் சாசனப்படி நமக்கு உள்ள உரிமையை கேட்டுப் பெற வேண்டிய விதத்தில் கேட்டுப் பெறத் தவறியதால், ‘ஐயா பிச்சை’ என்று கெஞ்சியதாலும் வந்த வினை. தவக்களை யெல்லாம் காறித்துப்பும் நிலை. கேவலம் இல்லையா இது…?
ஷாக்கீர் Naik தீவிரவாதி என்று அறிவித்துள்ள முஸ்லீம் நாடான பங்களாதேஷை எதிர்த்து,
இந்நாட்டிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தை மூட வேண்டும், பங்களாதேஷ் தூதரையும இந்நாட்டிலுள்ள பங்களாதேசிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என போர் முரசு கொட்டினால், இந்நாட்டிலுள்ள பங்களாதேசிகள் தங்களை (பெர்காசாவினரை) அறுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து விடுவார்கள் என்ற பயத்தினால்தான் ஒன்றுமே புடுங்க முடியாத மாங்கா காமனாட்டிகளான மஇகாவுக்கு எதிராக போர் முரசு கொட்டுகிறது பெர்காசா.
இனிமேலாவது மஇகா ஆண்மகனாக மாற முயற்சிக்க போகிறதா ? அல்லது திருநங்கையாக மாறி அம்னோவுக்கும் பெர்காசாவுக்கும் தனது ஆசனவாயை தூக்கி காட்டி உறவுகொள் என உருவி உருவி கெஞ்சி கொண்டிருக்க போகிறதா ?
என்பதை பொறுத்திருந்து பாப்போம்
மேலே, இவ்வளவு சமுதாய அன்பர்கள் துப்பியும் கொஞ்சம் கூட அசையாத எருமை மாடுகள் போல் இருக்கிறது ….. தேவை பட்டால் மட்டும் , ஏசுபவனின் கையை முத்தமிட தயாராக இருக்கிறார்கள் இந்த மானங்கெடட மா இ கா . செருப்பால் அடித்தாலும் வாயை திறக்க மாடடார்கள் … இந்த மா இ கா வுக்கு ஒரு தாய் என்று ஒரு பெண் இருந்திருந்தால் , அந்த தாய்மையை எப்படி எல்லாம் அவமான பட்டிருப்பாள் என்று நினைத்து பாருங்கள் …
நாங்கள் ஆளுங்கட்சியை ஏத்திப்போம்
ம.இ.கா. இளைஞர் படை என்ன புடுங்கிகிட்டு இருக்கிறார்களா இதில வேறு யுவராஜ் தலைமையில ஒரு குழு இருக்கு அவனுங்க இறங்க வேண்டியது தானே….
மலேசிய இந்தியஇழிஇன காவாலிகளின் (மஇகா) இளைஞர் படையே, இன்றா நேற்றா கடந்த 60 வருடமாக நீங்கள் புடுங்கிகிட்டு இருந்ததை பார்த்த எங்களுக்கே போரடித்து விட்டது.
ஒரு மாற்றத்திற்காக 60 வருடமாக புடுங்கியதை கத்தையாவது கட்டுங்களேன். எங்களுக்கும் போரடிக்காமல் இருக்கும் அல்லவா !
செம்பருத்தியில் கருத்து தெரிவிப்பவர்கள் தயவு செய்து இனிமேலும் மஇகா என்று சுருக்கி எழுதாமல், இன்றைய நமது இளைய தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்
“மலேசிய இந்தியஇழிஇன காவாலிகள் (மஇகா)” என்று குறிப்பிடுங்கள்.