பாஸ் 40 நாடாளுமன்ற இடங்களையும் 5 மாநிலங்களையும் கைப்பற்றுவது முடியாத செயல் என்று கூறும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், ஒருவேளை அம்னோ ஒத்துழைத்தால் அது சாத்தியமாகலாம் என்றார்.
“பல்முனைப் போட்டி நிலவும் 14வது பொதுத் தேர்தலில் அரை டஜன் இடங்களுக்குமேல் பாஸினால் வெல்ல முடியும் என்று தோன்றவில்லை”, என்றாரவர்.
அதேவேளை, பாஸும் அம்னோவும் நாடாளுமன்ற அல்லது மாநில அளவில் தேர்தல் உடன்பாடு என்ற ஒன்றைச் செய்து கொண்டிருந்தால் நிலைமை மாறுபடும்.
பாஸ், அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானைத் தக்க வைத்துக்கொள்வதுடன் திரெங்கானு, பாகாங்,, கெடா, சிலாங்கூர் ஆகியவற்றைக் கைப்பற்றவும் விரும்புகிறது.
நாடாளுமன்றத்தில் 40 இடங்களையாவது வெல்ல நினைக்கும் அது அதற்காக 100 வேட்பாளர்களைக் களமிறக்க திட்டமிடுகிறது.
2013 பொதுத் தேர்தலில் 73 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டு 21 இடங்களை வென்றது.
ஐந்து மாநில அரசுகளைக் கைப்பற்ற விரும்பும் பாஸ் கட்சிக்கு அக்கட்சியின் ஆன்மிகத் தலைவர் காலஞ்சென்ற நிக் அசிஸ் நிக் மாட் இல்லாத நிலையில் கிளந்தானைத் தக்க வைத்துக்கொள்வதே பெரும்பாடாக இருக்கும் என்று நினைக்கிறார் கிட் சியாங்.
திரெங்கானுவிலும் கெடாவிலும் அதற்குப் போதுமான இடங்கள் கிடைப்பது சந்தேகமே.
“அக்கட்சி பகாங், சிலாங்கூர் மாநிலங்களைக் கைப்பற்றும் என்பது நம்ப முடியாத ஒன்று. 2013-இல் பக்கத்தான் ரக்யாட் அணியில் இருந்து போட்டியிட்டபோது பகாங்கில் 42 இடங்களில் போட்டியிட்டு மூன்று இடங்களை மட்டுமே அதனால் வெல்ல முடிந்தது. சிலாங்கூரில் 56 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் மட்டுமே வென்றது”, என்றாரவர்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அம்னோவுடன் உடன்பாடு செய்து கொண்டிருந்தாலொழிய பாஸ் அதன் இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று லிம் குறிப்பிட்டார்.
செளந்தர்ய லஹரி
பாஸ்தலைகளுக்குகற்பனை வளம்அபாறம்
கிளந்தானை அம்மோவிடம்இழந்துநக்கிக்கிட்
டுபோகப்போவுது,கெட்டாவை இழந்ததுபோல்,அஸ்மின்400கோடிசேர்துவைத்
தள்ளார் BNனுக்குசிலாங்கூரில்.