மசீசவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) கையொப்பமிட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தின் வழி நாட்டிற்குள் கம்யூனிச ஊடுருவல் ஏற்படும் என்று பெர்காசா ஆபத்து சங்கை ஊதுகிறது.
அந்த ஒப்பந்தமும் ஒத்துழைப்பும் நிச்சயமாக கம்யூனிச தத்துவத்தையும் அதன் விரிவாக்கத்தையும் கொண்டுவரும். அது நாட்டிற்கு ஆபத்தானது.
இதுவரையிலான இந்த இரு அமைப்புகளுக்கிடையிலான நெருங்கிய உறவு அரசாங்கத்தின் சந்தேகத்தை எழுப்பியிருக்க வேண்டும்.
“இதை ஏன் அரசாங்கம் அனுமதிக்கிறது?”, என்று பெர்காசாவின் துணைத் தலைவர் சிராஜுடின் எச் சாலே வினவினார்.
மசீசவும் சிபிசியும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கல்வி, பண்பாடு, நிபுணத்துவம், வியூகங்கள். கிராமப்புற மேம்பாடு மற்றும் இதர விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் இந்த நாட்டிற்கு செய்தவற்றை அரசாங்கம் மறந்து விட்டதா என்று சிராஜுடின் கேட்டார்.
கம்யூனிஸ்ட்களை எதிர்த்துப் போராடி இறந்த பல்லாயிரக்கணக்கான மலாய் வீரர்களையும் அவர்களுடைய குடும்பங்கள் அடைந்த துன்பத்தையும் பிஎன், அம்னோ மற்றும் மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளும் மறந்து விட்டனவா என்று அவர் கேட்டார்.
எம்சிஎ “கூடவே இருக்கும் எதிரி”. புத்ராஜெயா, இராணுவம், போலீஸ் மற்றும் என்ஜிஒக்கள் எம்சிஎயின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், மசீசவின் சிபிசிவுடனான ஒத்துழைப்பை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் என்று பெர்காசா கோருகிறது என்று மேலும் கூறினார்.
இந்நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான் என்ற உண்மையை இனிமேலும் மூடி மறைக்க முடியாது என்பதை மசீச உணர தொடங்கி விட்டதின் தொடக்கம்தான் மசீச-சிபிசி ஒப்பந்தம்.
இனி பெர்காசாவும், பெர்காசா அமைப்பை போன்ற மற்ற ….களும் CHINA BALIK CHINA என்ற கோஷத்தை எழுப்பினால் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இந்த எருமை அமைப்புகளை சிதைத்து விடும்.
உண்மைகள் எது என்பதை யாவரும் அறிவர்- ஆனால் அதை எப்போது தங்களின் நல்ல நேரத்திற்கு உபயோகப்படுத்துவது என்பது அந்த நேரத்தில் தான் தெரியும். கம்யூனிசம் பெரிய மாற்றத்திற்கு உட்பட்டால்தான் இன்றைய உலகிற்கு அது ஏற்புடையதாக இருக்கும். சின் பெங் அமைதி ஒப்பந்தம் செய்திருக்கக்கூடாது.
அம்னோவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது பற்றி பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கு எதுவும் தெரியாதாம். ஆனால் பெர்காசாவின் துணைத் தலைவர் சிராஜுடின் எச் சாலே -மசீசவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) கையொப்பமிட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தின் வழி நாட்டிற்குள் கம்யூனிச ஊடுருவல் ஏற்படும் என்று பெர்காசா ஆபத்து சங்கை ஊதுகிறது.
அம்னோ-சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் பற்றி பெர்காசாவுக்கு எதுவும் தெரியாதாம் (http://www.semparuthi.com/?p=145605 )