கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக கட்டிடங்களில் கார் நிறுத்தும் இடங்களுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி விடலாமா என்று ஆலோசிப்பதாக த சன் நாளேடு நேற்று கூறியது.
இப்போதெல்லாம் வளர்ந்த நாடுகளில் நகரங்களில் உள்ள கட்டிடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்று தெரிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கோலாலும்பூரும் அப்போக்கைப் பின்பற்றுவது நல்லது என்றார்.
“தோக்கியோ, ஹாங்காங், மெல்பர்ன், லண்டன் போன்ற நகரங்களில் கட்டிடங்கள் கட்டும்போதும் பழைய கட்டிடங்கள் சீரமைக்கப்படும்போதும் கார் நிறுத்தும் இடங்கள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை.
“அவர்கள் நகரங்களில் கார்கள் பயன்படுத்துவதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். நாமும் அதைப் பின்பற்றலாமா என ஆலோசிக்கிறோம்.அப்போதுதான் உலகின் மிகப் பெரிய நகரங்களுக்கு இணையாக நாமும் விளங்க முடியும்”, என தெங்கு அட்னான் கூறினார்.