2016 மூன்றாம் காலாண்டில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்திருந்ததைக் கண்டு ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் வியப்படைகிறார்.
2013- இலிருந்து புதிதாக வாக்காளர்களாக பதிந்து கொள்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டிலும் 70,000 என்ற அளவில்தான் சீராக இருந்து வந்துள்ளது என்றாரவர்.
“(இப்போது திடீர் அதிகரிப்பினால்) பல கேள்விகள் எழுகின்றன. தேர்தல் ஆணைய(இசி)த் தலைவருடன் அது குறித்து விவாதிக்க விரும்புகிறோம்”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முகவர்களாக செயல்பட இசி இப்போது அனுமதிப்பதில்லை என்பதால் அவை புதிய வாக்காளர்களைப் பதிவு செய்ய சிரமப்படுகின்றன.
“அப்படியானால், பதிவு செய்வது யார்? புதிய வாக்காளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? பதிவு செய்வதில் நாங்கள் உதவியாக இருந்தபோதுகூட 70,000 பேரைத்தானே பதிவு செய்ய முடிந்தது”, என்று அப்துல் சமட் கூறினார்.
அதெல்லாம் பங்களாதேசி இங்கு வந்த போதே குடியுரிமை வழங்கி வாக்களிக்கும் உரிமையும் வழங்கி தேர்தலுக்கு தயாராக வைத்துள்ளனர்.
தெனகானித்தா: மில்லியன்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்க வேண்டும்
8:39 PM Thursday, May 18, 2017
இப்படிப்பட்ட அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பது தெரிந்தும்,
தெரியாததுபோல், புதிய வாக்காளர் பதிவில் எட்டு மடங்கு அதிகரிப்பு: நம்ப முடியவில்லை என நீங்கள் கூறுவதுதான் எங்களுக்கும் வியப்பாக இருப்பது மட்டுமல்ல நம்பவும் முடியவில்லை.