மலேசிய சோசியலிசக் கட்சி (பிஎஸ்எம்) எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் இன்று கூறினார்.
அக்கட்சி போட்டியிடவிருக்கும் தொகுதிகளில் சுங்கை சிப்புட் நாடாலுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதிகளான செமிஞ்சி, கோத்தா டாமன்சாரா மற்றும் ஜெலப்பாங் ஆகியவை அடங்கும். இத்தொகுதிகளில் அக்கட்சி 13 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளாது.
தற்போது, 20 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். கேமரன் ஹைலேண்ட்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் நாங்கள் போட்டியிடப் போவது அனைவரும் அறிந்த ஒன்றாகும் என்றாரவர்.
இறுதி முடிவு கட்சி தொகுதி அளவிலான பேச்சுகள் முடிவுற்ற பின்னர் அறிவிக்கப்படும். ஆனால், ஒன்று நிச்சயம்: இம்முறை நாங்கள் அதிகப்படியான இடங்களில் போட்டியிடுவோம் என்று சிவராஜன் திடமாகக் கூறினார்.
பிஎஸ்எம் தனித்து நிற்க தயார் என்ற போதிலும், பிஎன்னுக்கு எதிராக ஒரு முக்கோண போட்டியைத் தவிர்ப்பதற்காக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி உறுப்பினர்களுடன் பேசுவதற்கு கட்சி தயார் என்றாரவர்.
summa
தனியாக இயங்குகிறவரைக்கும் நல்ல பேர் இருக்கும், எதிர்க்கட்சியில் போய் சேர்ந்தால் உள்ள கண்ணும் நொல்ல கண்ணாயிடும் ! ஏதோ பார்த்து செய்யிங்கோ !!
Wasting time, money and energy. நான்கைந்து தொகுதிகளில் போட்டியிட்டால் போதுமானது. சுங்கை சிப்புட், கோத்தா டமன்சாரா, சேமின்யி தொகுதிகளில் போட்டியிடலாம். ஜெலாப்பாங் போன்றே கேமரன் மலையும் டெபாசிட் இழக்கும்.