தேர்தலை ஆணையத்தை பாரிசான் நேசனலின் அடிமையாக ஆக்கிவிடாதீர் என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்டுல் ரஹ்மான் தற்போதைய தேர்தல் ஆணையத்தின் தலவர் முகமட் ஹசிம் அப்துல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் உதவித் தலைவரான அப்துல்லா ரஷிட் இன்று இதனை பிகேஆர் அரசியல் பிரிவு உறுப்பினர் ஆர். சிவராசா, அமனா தகவல் பிரிவு தலைவர் காலிட் அப்துல் சாமாட் மற்றும் டிஎபியின் செபுத்தே உதவித் தலைவர் தெரசா கோ ஆகியோருடன் கூட்டாக விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் ஆட்சிக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்கு ஆளும் கூட்டணி தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நாம் அறிவோம்.
ஆனால், தேர்தல் ஆணையம் ஜனநாயக தேர்தல் நடைமுறைக்கு பொறுப்புள்ள ஓர் அமைப்பாகையால், அது மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதாக இருக்க வேண்டும் என்று கோரும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக பாரிசான் நேசனலின் அடிமையாக இருக்க முடியாது, இருக்கக்கூடாது என்று அவர்கள் அந்த அறிக்கையில் கூறுகின்றனர்.
அந்த அறிக்கையில் தற்போதைய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அவரது பொறுப்பற்ற நடத்தைக்காக சாடப்பட்டுள்ளார்.
பல தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்வு காண்பதற்காக அப்துல் ரஷிட்டின் தலைமையில் ஒரு குழுவைச் சந்திக்குமாறு தற்போதைய தலைவர் ஹசிம்மை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவர் முன்பு பிஎன்னின் கையாளாக இருந்தார், ஆகவே இவருக்கு தெரியும் அவர்களின் செயல்முறை. தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்
யார் யாருக்கு ஆலோசனை சொல்வது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது! எல்லாம் வெங்காயங்கள், சீ
முன்னாள் இசி தலைவரே
அருள்கந்தாவை பின்னுக்கு தள்ளி நீங்கள் முந்தி விடுவீர்கள் போலிருக்கே
+++
RAHIM A.S.S. wrote on 10 May, 2017, 10:19
அருள்கந்தா அகற்றப்பட்டதில் மக்களுக்கு வியப்பொன்றும் இல்லை.
விரைவில் கெவின் மோரைஸ்க்கு நேர்ந்ததுபோல் அசம்பாவிதம் அருள்கந்தாவுக்கு நேர்ந்து விடும் என ஒரு தரப்பினரும்,
அப்படி எதுவும் நடக்காது என மற்றொரு தரப்பினரும்
பந்தயத்தில் ஈடுபட்டிருப்பதுதான், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தாம் செய்த தவற்றை மற்றவர்கள் மேலும் செய்து விட கூடாது என்னும் உயரிய நோக்குடன் கூறும் பெரிய மனிதர்.