மலாக்காவில் ஒரு போலீஸ் கார்ப்பரலின் வீட்டிலிருந்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ரிம800,000 கண்டெடுத்தது.
சம்பந்தப்பட்ட அந்த கார்ப்பரல் மலாக்காவில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட மையங்களிடலிருந்தும் உடம்புப்பிடி மையங்களிலிருந்தும் பாதுகாப்புப் பணம் வசூலிப்பது தொடர்பில் கைதான 10வது நபராவார்.
மலாக்கா போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் அந்த 52-வயது ஆடவர் நேற்று பிற்பகல் மணி 2.15க்குக் கைது செய்யப்பட்டார்.
ஆடவர் கைது செய்யப்பட்டதையும் பணம் கைப்பற்றப்பட்டதையும் எம்ஏசிசி (நடவடிக்கை) துணை ஆணையர் டத்தோ அஸாம் பாகி உறுதிப்படுத்தினார்.
வெல்லம் சாப்பிடுறவனை விட்டுட்டு விரல் சூப்பிரவனை பிடிப்பது MACC-க்கு கை வந்த கலை எனபது மீண்டும் நிரூபித்து உள்ளார்கள்.
இந்த மாதிரி லஞ்சப் பணம் மற்றும் (போதைப் பொருள் உள்பட) சட்டத்துக்குப் புறம்பான வழிகளிலும் சேர்க்கப்பட்ட பணத்தின் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு சட்டம் வழி காட்டுகிறது. அரசு இதைச் செய்யுமா? மேலும் போலிஸ் துறையைப் போல சுங்க இலாகா உள்பட இதர அரசாங்க அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும், தவறான வழிகளில் சொத்துக்கள் சேக்கப்பட்டிருந்தால் அல்லது வருமானத்துக்கு மீறிய தொகை வங்கிக் கணக்கிலோ வீட்டிலோ இருந்தால்அவற்றையும் பிடுங்க வேண்டும்.
குடியானவன் அவர்களே
இப்படி லஞ்சம் வாங்கும் மலாய்க்காரர்களை ஷரியா நீதிமன்றத்தில் என்ன தண்டனை வழங்க போகிறார்கள் (அதாவது லஞ்சம் வாங்கிய கையோடு கைகுலுக்கி கொள்வார்களா ? அல்லது லஞ்சம் வாங்கிய கையை வெட்டுவார்களா?) என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், சிவில் சட்டப்படி சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் என்று கூறுகிறீர்களே இது நியாயமா ?
இதெல்லாம் பனிக்கட்டியின் நுனியை. அடியில் இருப்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை –இருந்திருந்தால் நம்பிக்கை நாயகன் இவ்வளவு சுதந்திரமாக உலகம் சுற்ற முடியுமா மக்களின் பணத்தில்?