சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தொடர்ந்து இருக்க பாஸ் முடிவு

excoபிகேருடன்    உறவுகளை    அறுத்துக்கொண்டாலும்    சிலாங்கூர்   ஆட்சிக்குழு(எக்ஸ்கோ)வில்    உள்ள   அதன்   மூன்று   பிரதிநிதிகளும்  அதில்     தொடர்ந்து       இருப்பார்கள்   என   பாஸ்    அறிவித்துள்ளது.

அம்மூவரும்   எக்ஸ்கோவில்   தொடர்ந்து   இருப்பது    என்ற  முடிவை    பாஸ்   மத்திய   செயல்குழு   இன்று   அதன்   கூட்டத்தில்    முடிவு     செய்ததாக   அக்கட்சியின்   தலைமைச்    செயலாளர்   தகியுடின்    ஹசான்   கூறினார்.

சுல்தான்  விரும்பும்வரை   அவர்கள்   எக்ஸோவில்   இருக்க   முடியும்    என்றாரவர்.

“சுல்தான்  நினைத்தால்   நடவடிக்கை   எடுக்கலாம்.  சுல்தானும்   மந்திரி  புசாரின்(எம்பி)   ஆலோசனையின்படிதான்   நடவடிக்கை    எடுப்பார்.  அதுதான்  நடைமுறை.

“அதுதான்  பிகேஆரும்   முடிவு  ஏதும்   செய்யாமல்   (வெளிநாடு   சென்றுள்ள)  எம்பி   திரும்புவதற்காகக்   காத்திருக்கிறது.

“எம்பி  விலக்க   நினைத்தாலும்    அதற்கு    ஆட்சியாளரின்   ஒப்புதல்   தேவை. இதுவரை  பதவி  விலகச்  சொல்லி    எங்களுக்கு   உத்தரவில்லை.  அதனால்   தொடர்ந்து   இருப்போம்”,  என்று   செய்தியாளர்களிடம்   கூறினார்.