பிரயாணத் தடைக்கு எதிரான மரியாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

 

Hcourtnotomariaகடந்த ஆண்டு மே மாதத்தில் தென்கொரியாவுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து பெர்சே 2.0 தலைவர் மரியா சின் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற மறுஆய்வு மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று நிகாரித்து தீர்ப்பு வழங்கியது.

இமிகிரேசன் சட்டம் 1959 செக்சன் 59A(1) உள்துறை அமைச்சர் மற்றும் இமிகிரேசன் தலைமை இயக்குனர் எடுத்த முடிவை, நடைமுறைக்கான காரணங்கள் தவிர்த்து, நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது என்று நீதிபதி நிக் ஹாஸ்மாட் நிக் மொகமட் அவரது தீர்ப்பில் கூறினார்.

ஆகவே, “இது (மறுஆய்வு இல்லை) விவாதிக்கக் கூடியதே அல்ல”, என்றார் நீதிபதி.

வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு அவருக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உள்துறை அமைச்சருக்கும் இமிகிரேசன் இலாகாவுக்கும் கிடையாது என்றும் நீதிபதி கூறினார்.

வழக்குரைஞர் குர்தியால் சிங் பெர்சே தலைவர் மரியாவை பிரதிநிதித்தார்.