தேர்தல் பதிவேட்டிலிருந்து வாக்காளர்கள் பெருமளவில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என்று கிளந்தான் பாஸ் இன்று கூறிக்கொண்டது.
வாக்களர்கள் இடமாற்றம் செய்யப்படுவது கிளந்தான் பாஸை வீழ்த்துவதற்கான முயற்சியாக இருக்கக்கூடும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான முகமட் ஃபாட்ஸில் ஹசான் கூறினார்.
பெருமளவில் வாக்காளர்கள் இடமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக புக்கிட் பானாவ் தொகுதியில் என்று ஃபாட்ஸில் கூறினார்.
இவ்வாண்டில் சுமார் 1,100 வாக்காளர்கள் அத்தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றாரவர்.
“எனது தொகுதியான தெமங்கானுக்குள் சுமார் 700 வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமான அம்னோ மற்றும் பாரிசான் ஆதரவாளர்கள் என்று நான் கண்டுபிடித்துள்ளேன்.
“இது ஒரு பாவகரமான செயல். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை”, என்று ஃபாட்ஸில் கோலாலம்பூர் பாஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாகினி தேர்தல் ஆணையம் மற்றும் பிஎன்னிடமிருந்து பதிலைப் பெற முயன்று கொண்டிருக்கிறது.
இது குறித்து கருத்துரைத்த பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், பாஸ் இந்த மாற்றத்தைக் கண்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சட்டவிதிகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று மேலும் கூறினார்.
கிளந்தானில் மட்டுமல்ல,நாடு முழுவதும் எதிரக்கட்சிகளின் வசமுள்ள தொகுதிகளில் பாரிசான், தேர்தல் ஆணையத்தில் துணையோடு தனது ஜெகதளப் பிரதாப வேலையினை முடுக்கி விட்டிருக்கிறது.