வெளிநாட்டு தொழிலாளர்களை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்கும் புத்ராஜெயாவின் கொள்கை அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தெனகானித்தா இன்று புத்ராஜெயாவை வலியுறுத்தியது.
இமிகிரேசன் இலாகாவின் இந்த முயற்சியை வரவேற்கிறோம் என்று கூறிய தெனகானித்தாவின் செயல்முறை இயக்குனர் குலோரீன் டாஸ், மலேசியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இவ்வாரத் தொடக்கத்தில், இமிகிரேசன் இலாகா ஆயிரக்கணக்கான தற்காலிக வேலைச் சீட்டுகள், வேலை அனுமதிகள் மற்றும் தொழில் நிபுணர்கள் வருகை அனுமதிகள் ஆகியவற்றை வழங்கியது பற்றி கருத்துரைத்த குலோரீன் இவ்வாறு கூறினார்.
சட்டப்பூர்வமாக்கும் கொள்கையில் போரஸ் சிட்டி போன்ற பெரிய மேம்பாட்டு திட்டங்களில் வேலை செய்பவர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்றாரவர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அவலங்களைக் களைவதற்கு அரசாங்கம் ஒரு விசாலமான வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குடியேறிகளை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்கி கள்ளக்குடியேற்றத்தை ஆதரியுங்கள்.
தேர்தல் நேரத்தில் கள்ளக்குடியேறிகளுக்கு குறிப்பாக பங்களாதேஷிகளுக்கு அடையாள அட்டை வழங்கி BN அரசாங்கம் தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஜெயித்தது என்று ஒப்பாரி வைப்பதே, இந்நாட்டிலுள்ள ஒரு சில அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு ஒரு பொழைப்பா போச்சு.
உனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்குது .உள்நாட்டு தொழிலாளிக்கு வேலை கிடைக்கவே கஷ்ட்டமா இருக்கு இதுல கள்ள குடியேறிக்கு வக்காலத்து வாங்குற இந்த மூதேவி .