நேற்று சுங்கை பூலோவில் கம்போங் பாயா ஜராஸ் ஹிலிரில் 15 பேர் சேர்ந்து ஒரு ஆடவரைத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
அந்த 25வயது ஆடவரின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்தன. அவரது முதுகுப் பகுதியும் கழுத்தும் இடது தோள்பட்டையும் சுடுநீர் ஊற்றப்பட்டதால் வெந்து போயிருந்தன.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எழுவரை போலீசார் பிடித்திருப்பதாக சுங்கை பூலோ போலீஸ் தலைவர் சுப்பிரெண்டெண்ட் சோமு சுப்ரமணியம் கூறினார். மற்றவர்களையும் போலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
“தொடக்க விசாரணைகளிலிருந்து தாக்குதலுக்கு ஆளானவர் மணவிலக்கு பெறும் தருவாயில் உள்ள இன்னொருவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அது தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம்”, என்றாரவர்.
தாக்குதலுக்கு ஆளானர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரது நிலை திடமாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
-பெர்னாமா
மதத்தின் பெயரால் நாட்டை தே…. வீடுபோல ஆக்கியாச்சு.
மணவிலக்கு பெற்றால் என்ன பெறாவிட்டால் என்ன
அனுபவி ராஜா அனுபவின்னு விட்டுவிட வேண்டியதுதானே.
பங்களாதேஷி அனுபவித்தால் ஆனந்த தாண்டவம் ஆடுறதும்
உள்ளூர்காரன் அனுபவித்தால் அடித்து துவம்சம் செய்வதும் அநியாயம் என்று மதம் சொல்லி கொடுக்கலை போலிருக்கிறது.