இன்று செகிஞ்சானில் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, சிலாங்கூர் பாஸ் தலைவர்களுடன் ஆழ்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார்.
அஸ்மினும் மற்ற மாநில அரசுத் தலைவர்களும் சிலாங்கூர் ஆட்சியாளர் ஷராபுடின் இட்ரிஸ் நெல் விளையும் பூமிக்கு வருகை மேற்கொள்வதையொட்டி அங்கு குழுமி இருந்தனர்.
மந்திரி புசார் சிலாங்கூர் பாஸ் ஆணையர் சாலேஹன் மாக்கியுடனும் மூன்று எக்ஸ்கோ உறுப்பினர்கள் இஸ்கண்டர் அப்துல் சமட், அஹ்மட் யூனுஸ் ஹைரி, சைடி அப்துல் தாலிப் ஆகியோருடனும் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட செய்தியாளர்கள் அவர்கள் அமர்ந்திருக்கும் மேசையை நொக்கி நகர்ந்தனர்.
ஆனால், அவர்களை அருகில் வர வேண்டாம் என்று தடுத்து நிறுத்திய அஸ்மின் பாஸ் தலைவர்களுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.
பிகேஆர், டிஏபி கட்சிகளின் எக்ஸ்கோக்களும் அந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். ஆனால், அஸ்மின் பாஸ் கட்சித் தலைவர்களுடன் மட்டுமே உரையாடினார்.
சுல்தான் வரும்வரையில் சுமார் 20 நிமிடங்களுக்கு அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.
நல்ல நகர்வு. பக்காத்தானை உடைக்க எல்லா மூலைகளிலிருந்தும் எட்டப்பர்கள் கிளம்பிவிட்டார்கள். மீண்டும் ஒன்று சேர்ந்து பாரிசானின் கோட்டையை உடைக்க அணி திரளவேண்டும்.