பெர்காசா-வை எண்ணி வேள்பாரி கவலையுறவில்லை

perkasaபெர்காசா   தமக்கு   எதிராக   போர்க்கொடி    உயர்த்தியிருப்பது  குறித்து    கவலைப்படவில்லை    என்கிறார்   மஇகா   பொருளாளர்  எஸ்.    வேள்பாரி.

“நான்  ஏற்கனவே   தெளிவாக    சொல்லி  விட்டேன்.   நான்  அவர்களைப்    பற்றி  நியாயமற்ற    கருத்து     தெரிவித்திருந்தால்    பெர்காசா,      தெரு   ஆர்ப்பாட்டமெல்லாம்    செய்யாமல்     என்மீது   தாராளமாக     வழக்கு    தொடுக்கலாம். அது    என்மீது    அவர்கள்    கூறியுள்ள    அவதூறுகளுக்கு    எதிராக    என்னைத்   தற்காத்துக்கொள்ள  ஒரு   வாய்ப்பாகவும்    அமையும்.

“மீண்டும்   வலியுறுத்திக்   கூறிக்  கொள்கிறேன்,    எந்த    நேரத்திலும்    நான்   இஸ்லாத்தை     அவமதித்தோ   சிறுமைப்படுத்தியோ    பேசியதில்லை”,  என   வேள்பாரி    ஓர்     அறிக்கையில்     கூறினார்.

நேற்று   பெர்காசா   இளைஞர்     தலைவர்   அஸ்ருல்     அக்மால்   சஹாருடின்    பெர்காசா   கொடிகள்   ஏந்திய   ஒரு   கூட்டத்துடன்   மஇகா    தலைமையகம்    சென்று   வேள்பாரிக்கு     எதிராக     ஆர்ப்பாட்டம்    செய்தார்.

ஸாகிர்   நாய்க்கை    ஆதரிப்பதற்காக    பெர்காசாவை     ஐஎஸ்  பயங்கரவாத   அமைப்புடன்       தொடர்புப்படுத்திப்     பேசியதால்    அந்த  அமைப்பு   வேள்பாரிக்கு    எதிராக    ஆத்திரமடைந்துள்ளது    என்று    அஸ்ருல்   கூறினார்.

எதிர்வரும்  தேர்தலில்    மஇகாவுக்கு   முஸ்லிம்   வாக்குகள்   கிடைக்காதபடிச்  செய்யப் போவதாகவும்    அவர்    சொன்னார்.