பினாங்கு சட்டமன்ற கூட்டத்திலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டனர்

 

daprepsentoutஇன்று இரு பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதோடு அவைத் தலைவர் லா சூ கியாங்கின் உத்தரவுக்குப் பணியத் தவறியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவ்விரு உறுப்பினர்களும் – டிஎபியின் ஆர்எஸ்என் ராயர் மற்றும் பிஎன்னின் ஷா ஹெட்னான் அயூப் ஷா – அவையின் இன்றைய நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.

குறிப்பிட்ட சில பிஎன் அரசியல்வாதிகள் பெண்களை கவர்ச்சிப் பொருள்களாகக் கருதுகின்றனர் என்று  ராயர் கூறியதைத் தொடர்ந்து ஷா ஹெட்னானுடன் வாக்குவாதம் தொடங்கியது. அவர் ராயர் கூறியதைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். ராயர் மறுத்து விட்டார்.

அவைத் தலைவர் தலையிட்டு அவர்களை உட்காரும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் உத்தரவுக்குப் பணிய மறுத்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.