முகைதினை ஆதரிக்கும் மகாதிர், பெர்சத்துவில் இருக்கும் கலகக்காரர்கள் நஜிப்பின் கையாட்கள் என்கிறார்

 

MbacksMபார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) அவைத் தலைவர் மகாதிர் அக்கட்சியின் தலைவர் முகைதின் யாசினை தற்காத்து பேசியதோடு அவரை பதவியிலிருந்து விலகக் கோருகிறவர்களை நஜிப்பின் கையாட்கள் என்று கூறினார்.

ஈப்போ பெர்சத்துவின் தலைவர் அஸ்ருல் சுஹாடி அஹமட் மொக்தார் கட்சியின் தலைவர் முகைதின் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.

இப்படி முன்மொழிதல் செய்பவர்கள் பெர்சத்து அதன் போராட்டத்தில் தோல்வி அடைவதை விரும்புகிறார்கள்; நான் தோல்வி அடைவதையும் விரும்புகிறார்கள். நஜிப் வெற்றியடைவதை விரும்புகிறார்கள் என்று மகாதிர் கூறினார்.

“அவர்கள் என்னை ஆதரிப்பதாக கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே எனது எதிரிகள். அவர்கள் நஜிப்புக்காக போராடுகிறார்கள். இந்த ஈடுபாட்டை அவர்கள் தொடர்ந்தால், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

“நஜிப் ஆதரவாளர்களுக்கு பெர்சத்துவில் இடமில்லை”, என்று மகாதிர் அவரது வலைதளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

நஜிப்புக்கு எதிராகப் பேச தீர்மானித்த காலத்தில் முகையின் பிரதமர் பதவியிலிருந்து இதயத் துடிப்பு தொலைவில்தான் இருந்தார் என்று மகாதிர் சுட்டிக் காட்டினார்.

அம்னோ தலைவர்களை, குறிப்பாக பதவிகளில் இருப்பவர்களை, நம்பச்செய்வது கடினம் என்பதை நாம் அறிவோம். அப்படியே விலகியவர்கள், அமைச்சர்கள் உட்பட, எங்களுடன் இணைவதற்கு தயங்கிறார்கள். “என் அருகிலோ பெர்சத்து அருகிலோ வர பயப்படுகிறார்கள் ஏனென்றால் நாங்கள் நஜிப் அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறோம்.”

“முகைதின், பதவியை இழந்த மற்றவர்களைப் போலல்லாமல், என்னை விட்டு ஒதுங்கிக்கொள்ளவில்லை”, என்றார் மகாதிர்.

முகைதின் பெர்சத்துவின் வெற்றிக்கு, அவரை அகற்ற வேண்டும் என்று கோருகிறவர்களை விட, ஏராளம் செய்துள்ளார்.

“இப்போது அவர் நீக்கப்பட்டால், கட்சியில் பிளவு ஏற்படும் ஏனென்றால் அதிகமான உறுப்பினர்கள் அவரை ஆதரிக்கின்றனர். அதனால், நாம் 14 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நமது முயற்சியில் தோல்வி அடைவோம்”, என்று மகாதிர் எச்சரிக்கை விடுத்தார்.