யுகே கலை நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர்

 

UKconcertdeathtollபிரிட்டீஷ் நகர் மான்செஸ்டரில் அமெரிக்க பாடகர் அரியனா கிராண்டே பங்கேற்றிருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்புக் காரணம் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பாளர் என்று சந்தேகிப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 50 பேர் காயமுற்றதாகத் தெரிவித்த பிரிட்டீஷ் போலீசார், இதை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக கூறினர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், இது 2005 ஆம் ஆண்டு ஜூலையில் லண்டன் போக்குவரத்து அமைவில் நான்கு பிரிட்டீஸ் முஸ்லிம்கள் தற்கொலைக் குண்டுகளை வெடித்து 52 பேர்களைக் கொன்ற சம்பவத்திற்கு பிறகு நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும் என்று போலீஸ் கூறியது.