பாதிரியார் கோ கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன, அவரை விடுவிக்கக் கோரி கதறும் குடும்பத்தினர்

 

100daysalreadyபாதிரியார் ரேமண்ட் கோ பெட்டாலிங் ஜெயாவிலிருந்து கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவரது குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைத்தப்பாடில்லை.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவரது துணைவியார் சூசானா லியு அவரது கணவரை விடுவிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

“நானும் எனது குழந்தைகளும் அதிகமாக வேண்டுவது எனது கணவர் பாதுகாப்பாகவும் உடல்நலத்துடனும் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் அவரைக் கடத்தியவர்களும் அவர்கள் குற்றம் புரிய உதவியவர்களும் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும்”, என்று அவர் கூறினார்.

பெப்ரவரி 13 இல், கோ பெட்டாலிங் ஜெயாவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது எட்டு முகமூடி அணிந்திருந்தவர்களால் ஒரு நிமிடத்தில் கடத்தப்பட்டார். கோவும் அவரது காரும் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இச்சம்பவம் சிசிடிவியி பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவின் குடும்பத்தினர் இச்சம்பவத்தை ஐநாவின் வலுக்கட்டாயமாக அல்லது தானாகவே காணாமல் போகும் விவகாரத்திற்கான குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.