பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மாநிலச் சட்டமன்றத்துக்கு அளித்த எழுத்து வடிவிலான மறுமொழி ஒன்றில், இரகசியக் காப்பு விதிமுறை இருந்தாலும்கூட மாநில அரசுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின் விவரங்களைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படும் என்று கூறினார்.
“தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாலும் இரகசியக் காப்பு விதிமுறையால் தகவலறியும் உரிமை கட்டுப்படுத்தப்படக்கூடாது என்பதாலும் அரசுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின் விவரங்களை வெளியிட வேண்டுமாய் தனியார் நிறுவனங்களை மாநில அரசு கேட்டுக்கொள்ளும்”, என்றாரவர்.
மாநில அரசுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை அறிமுகப்படுத்தியது பக்கத்தான் அரசல்ல என்று கூறிய லிம், அது முந்தைய பிஎன் -கெராக்கான் அரசால் கொண்டுவரப்பட்டதாகும் என்றார்.