பக்கத்தான் ஹராபான் இளைஞர், மகளிர் அணிகள் ஒரு மகஜர் கொடுப்பதற்காக தேர்தல் ஆணைய(இசி)த் தலைமையகம் சென்றனர். இசி அதிகாரிகள் மகஜரைப் பெற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து அவர்கள் இசி கட்டிடத்தின் வெளிவாயில் கதவுகளைச் சங்கிலி கொண்டு பூட்டினர்.
இசி தலைமையகத்துக்கு வெளியில் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மகஜர் கொடுப்பதற்காகக் காத்திருந்தார்கள்.
இசி தலைவர் (முகம்மட் ஹாஷிம் அப்துல்லா வருவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
பெயரைத் தெரிவிக்க விரும்பாத இசி அதிகாரி ஒருவர் ஹாஷிம் புத்ரா ஜெயாவில் இல்லை என்றும் அலுவல் காரணமாக ஈப்போ சென்று விட்டார் என்றும் கூறினார்.
மகஜர், அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்து வந்த துணை வாக்காளர் பட்டியலின் வரைவை நிறுத்தி வைக்க இசி செய்துள்ள முடிவைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது.
“இசியைத் துப்புரவு படுத்துங்கள்”, “துணை வாக்காளர் பட்டியல் கொடுப்பதில் கட்டுப்பாடு தேவையில்லை போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளைத் தாங்கி இருந்த அவர்கள் “மக்கள் நீடு வாழ்க” என்றும் முழக்கமிட்டனர்.
பின்னர், செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய பார்டி அமனா இளைஞர் தலைவர் முகம்மட் சானி ஹம்சான், தாங்கள் பூட்டிய கதவுகளைத் திறக்கப் போவதில்லை என்றார்.
மகஜரை ஏற்க இசி மறுத்ததை அடுத்து அதை மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.
எப்போதோ செய்திருக்கவேண்டியது. Better late than never .கவனம், தற்போதைய China made பூட்டுகள் எளிதில் உடைந்துவிடுகிறது.