திரெங்கானுவில் ரமலான் மாதத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பால் உணவகங்கள் செயல்பட முடியாது

foodரமலான்  மாதத்தில்    குறிபிட்ட   நேரத்தில்  மட்டுமே   உணவகங்கள்    செயல்படலாம்.   அதை  மீறி   செயல்படும்   உணவகங்கள்    இழுத்து   மூடப்படும்    என்று   மாநில   ஆட்சிக்குழு   உறுப்பினர்   கசாலி   தயிப்   கூறினார்.

கடந்த     ஆண்டைப்போலவே     இவ்வாண்டிலும்     ரமலான்   சந்தைகளையும்   உணவகங்களையும்   கண்காணிக்குமாறு   மாநில    அரசு     ஒவ்வொரு   மாவட்டத்திலும்    உள்ள    சமயத்  துறையைப்   பணித்துள்ளது.

“வியாபாரிகள்  பிற்பகல்   மணி    2.30க்கு   அவர்கள்   தொழில்   இடங்களுக்குச்  சென்று   ஆயத்த   வேலைகளைச்  செய்யலாம்.  ஆனால்,  மூன்று   மணிக்குப்  பிறகுதான்      அவர்கள்     செயல்பட   முடியும்”,  என்றாரவர்.