ஷாபி அப்டால்: 1எம்டிபி-இடமிருந்து பணம் பெற்றதில்லை

apdalபார்டி  வாரிசான்    சாபா    தலைவர்   ஷாபி   அப்டால்,   அம்னோவில்   இருந்த  காலத்தில்   1எம்டிபி-இலிருந்து   பணம்   பெற்றதாகக்   கூறப்படுவதை   மறுத்தார்     என   மலாய்  மெயில்   ஆன்லைன்  கூறிற்று.

அம்னோவின்    முன்னாள்    உதவித்      தலைவருமான    அவரும்   அம்னோவின்   முன்னாள்   துணைத்   தலைவர்    முகைதின்   யாசினும்தான்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்    பெற்ற   நன்கொடையால்   பெரிதும்   பயனடைந்தவர்கள்      என்று    அம்னோ   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசீஸ்   கூறியிருப்பதையும்   அவர்   மறுத்தார்.

“நான்  அறிந்தவரை   நஜிப்   1எம்டிபி  பணம்   எதனையும்   எனக்குக்  கொடுத்ததில்லை.

“நாங்கள்   பெரிதாக   பெற்றோம்    என்று   நஸ்ரி   எதைக்   குறிப்பிடுகிறார்,  அது   என்னுடைய   எந்த   வங்கிக்   கணக்கில்    போடப்பட்டது,  சொல்லுங்கள்,   தெரிந்துகொள்ள    விரும்புகிறேன்”,  என்றாரவர்.

“ஒரு  மூத்த   அமைச்சர்  இப்படியா  பொய்   சொல்வது.

“எனக்கு   நன்றாக   நினைவிருக்கிறது,  நான்   1எம்டிபி  குறித்து   கேள்வி   கேட்டபோது   நஸ்ரி  என்  பக்கத்தில்தான்   அமர்ந்திருந்தார்.  அப்போது   அவர்,  யாருக்கும்     தெரியாமல்  கட்டை  விரலை   உயர்த்திப்   பாராட்டினார். அப்படிப்பட்ட   கேல்விகள்   கேட்பதுதான்   சரி   என்றார்.  அப்போது  அப்படிச்   சொன்னவர்    இப்போது   இப்படிப்   பேசுவதை   நினைத்து   வியக்கிறேன்.

“நான்  பணம்  பெற்றுக்  கொண்டிருந்தால்   அது   குறித்து   கேள்வி   கேட்டிருக்க   மாட்டேன்”,  என்று  ஷாபி   சொன்னதாக   மலாய்  மெயில்    கூறியது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை,   நஸ்ரி   கடந்த   பொதுத்   தேர்தலின்போது   கட்சியின்     செலவுகளுக்காக  பிரதமருக்குக்  கிடைத்ததாகக்  கூறப்படும்   ரிம2.6 பில்லியன்   நன்கொடையிலிருந்து  தமக்குப்   பண  உதவி   கிடைத்ததை  ஒப்புக்கொண்டார்.

தம்மைவிட   ஷாபியும்   முகைதினும்   கூடுதலாக   பெற்றனர்   என்றும்   சுற்றுலா   அமைச்சர்   கூறினார்.