கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் வான் அஹ்மட் பரிட் வான் சாலே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவுக்குமிடையிலான வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதியின் நலனை முன்னிட்டு விலகிக் கொண்டிருக்கிறார்.
நீதித்துறை ஆணையர் பொறுப்பை ஏற்பதற்குமுன் அப்துல்லா அஹமட் நிர்வாகத்தில் உள்துறை துணை அமைச்சராகவும் செனட்டராகவும் இருந்தவர் வான் அஹ்மட்.
வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை மலாயா தலைமை நீதிபதிக்குத் தெரியப்படுத்தப் போவதாகவும் அவர் சொன்னார்.
“நீதிபதி அவதற்குமுன் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்ததையும் நாட்டின் நிர்வாகத்தில் பங்கு கொண்டிருந்ததையும் டேவான் நெகரா உறுப்பினராக பணியாற்றியதையும் அனைவரும் அறிவர்”, என்றாரவர்.
வழக்கில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் தாம் விலகிக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் தாம் சுயமாக இம்முடிவுக்கு வந்ததாக நீதிபதி வான் அஹ்மட் குறீப்பிட்டார்.