சிலாங்கூர் மாநில அரசில் உள்ள மூன்று பாஸ் ஆட்சிக்குழு(எக்ஸ்கோ) உறுப்பினர்களும் 14வது பொதுத் தேர்தல்வரை எக்ஸ்கோ-களாக தொடர்ந்து இருப்பார்கள் என்று சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினர்.
சுல்தான் பலவற்றையும் ஆராய்ந்து குறிப்பாக, சிலாங்கூர் அரசின் நிலைத்தன்மையையும் மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு அப்படிப்பட்ட முடிவைச் செய்துள்ளார் என சிலாங்கூர் ஆட்சியாளரின் தனிச் செயலாளார் முகம்மட் முனிர் பானி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முடிவெடுக்குமுன்னர், சுல்தான் ஷாராபுடின் மந்திரி புசார் அஸ்மின் அலியையும் சிலாங்கூர் பாஸ் ஆணையர் சலேஹான் முகியையும் மூன்று பாஸ் எக்ஸ்கோ-களையும் தனித்தனியே சந்தித்துப் பேசியதாகவும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் அரசின் நிலைத்தன்மை குறித்து எதிர்மறையான ஊகங்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.