கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மலேசியா பற்றிய பேச்சுகளில் 1எம்டிபி முறைகேடுதான் முக்கிய இடம்பெற்றிருக்கிறது.
இப்படி 1எம்டிபி மீதே கவனம் செலுத்தி மற்ற முறைகேடுகளைக் கவனிக்கத் தவறி விடுகிறோம் என்று எச்சரிக்கிறார் பொருளாதார வல்லுனர் ஜோமோ குவாமே சுந்தரம்.
முன்னாள் ஐநா பொருளாதார மேம்பாட்டுக்கான உதவித் தலைமைச் செயலாளரான அவர், ஓர் எடுத்துக்காட்டாக, பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹா (எப்ஜிவி) பங்கு விலை குறைந்து வருவதைக் குறிப்பிட்டார்.
“பெல்டா குடியேற்றவாசிகள் எப்ஜிவி-இல் பங்குகள் வாங்க ஊக்குவிக்கப்பட்டார்கள். இப்போது பங்குகளின் மதிப்பு அவர்கள் எவ்வளவு கொடுத்து வாங்கினார்களோ அதில் மூன்றில் ஒரு பகுதியாக அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலாக இருக்கும் அவ்வளவுதான்.
“தேர்தல் நெருங்கி வருவதால் அவர்கள் போட்ட பணத்தை இழக்க மாட்டார்கள், அது இது வென்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். ஆனால், முறைகேடு நிகழ்துள்ளதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு. அது ஊழலா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் பிறகு விரிவாக பேசலாம்”, என பேராசிரியர் ஜோமோ பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.
இந்த ஆள் வேற வெவஸ்தையே இல்லாம…..விலைவாசி விண்ணை முட்டுகிறது; அன்றாடம் பிழைப்பை ஓட்டறதுக்கே முழி பிதுங்குது..அதைக் கேட்கவே எந்த நாதியும் இல்லே…