கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்ததாக கூறப்பட்டுள்ள 12,926 பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹாணி அப்துல் கரிம் கூறுகிறார்.
இச்சூழ்நிலை மிகக் கடுமையானது ஏனென்றால் இதனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் எதிர்மாறான இயல்புள்ள அகத்தாக்கத்துடன் வளர்வார்கள் என்றார்.
அவரது அமைச்சு குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் முறைகேடாக நடத்தப்படுதல் ஆகியவற்றை கையாள்வதற்கு போலீசாருடன் மிக நெருக்கமாக செயல்படும் என்பதோடு பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்து அவர்கள் வழக்கமான வாழ்க்கையைத் தொடர ஆவன செய்யப்படும் என்றாரவர்.
அதிகார துஷ்பிரயோகங்கள்,
ஊழல்கள்,
சமய தீவிரவாதங்கள்,
சிறார் பாலியல் வன்முறைகள்,
வெளிநாட்டுகாரர்களுக்கான வேசி சேவைகள்,
உயர்தர படுகொலைகள்,
விமான பேரிடர்கள்,
பிரமுகர்கள் கடத்தல்கள்,
குண்டர்களை ஏவி அச்சுறுத்துதல்கள்
என நாடு TN50 நோக்கி படு வேகமாக முன்னேறுகிறது.
ஐயா RAHIM A .S .S அவர்களே– நீங்கள் கூறியதை பற்றி எல்லாம் இவன்களுக்கு அக்கறை கிடையாது– நாடு எக்கேடு கெட்டாலும் அக்கறை இல்லை – தாங்கள் பதவியில் இருந்து எல்லாவற்றையும் அனுபவித்து மற்றவர்களுக்கு -மலாய்க்காரன் அல்லாதவர்கள்- ஒன்றுமே இல்லாமல் இருந்தால் இவன்களுக்கு மற்றட்ட மகிழ்ச்சி.