சிலாங்கூர் பார்டி அமனா நெகரா(அமனா) கட்சியின் இளைஞர் பிரிவு பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலத்தில் கீழறுப்பு வேலையில் ஈடுபடலாம் என அஞ்சுகிறது.
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூரின் ஆட்சிக்குழு இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
மாநில ஆட்சிக்குழுவில் பாஸ் இடம்பெற்றிருப்பதுதான் அதன் கவலைக்குக் காரணம்.
மாநில ஆட்சிக்குழுவில் தன் கட்சிக்காரர்கள் இடம்பெற்றிருப்பது 14-வது பொதுத் தேர்தலில் தனக்குச் சாதகமாக இருக்கும் என்றுகூட இந்த இஸ்லாமியக் கட்சி நினைக்கலாம் என்று அம்னா இளைஞர் தலைவர் அப்பாஸ் அஸ்மின் கூறினார்.
“இதைத்தான் எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டே வேலை செய்வது என்று சொல்வது. மணவிலக்கு பெற்றாயிற்று. இன்னும் ஒரே வீட்டில்தான் இருப்பேன் என்றால் என்ன பொருள். ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
“சுல்தானின் முடிவை மதிக்கிறோம். அதே வேளையில் பாஸ் சிலாங்கூரில் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடக்கூடும் என்றும் அஞ்சுகிறோம்”, என அப்பாஸ் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
பாஸ் இப்போது எதிரணிக் கூட்டணியில் இல்லை. அது விரும்புவதைச் செய்யலாம். அது இப்போது அம்னோவுடன் நெருக்கமாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாஸினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சமாளிக்க ஒரு செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்றாரவர்.
“இதன் தொடர்பில் (ஹராபான் கட்சிகளின்) மாநிலத் தலைவர்கள் நால்வருக்கும் கடிதம் எழுதப் போகிறோம். செயலகத்தில் நான்கு கட்சிப் பேராளர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்”, என்று அவர் சொன்னார்.
குழிபறிக்கும் வேலையை செவ்வனே செய்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என மதபோதனையில் உள்ளதா ? என்னவோ ?
எதற்கும் நன்கு விசாரித்துவிட்டு அமனா இளைஞர்கள் அறிக்கை வெளியிடுவது நல்லது.
குழிபறிப்பது நல்ல வேலை. குழிபறித்தால் தான் செத்த பிணங்களை அடக்கம் செய்ய முடியும் இல்லாவிட்டால் வீதியில் நாறி கிடக்கும்!